மாணவர் எடையில் 10 சதவீதம் மட்டுமே புத்தகப் பையின் சுமை இருக்க வேண்டும் - மத்திய அரசு

0 3802

ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தக பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன் மீது குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது எனவும், தரமான மதிய உணவு மற்றும் நீர் போன்றவற்றை பள்ளிகளிலேயே வழங்கவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments