சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கடும் வீழ்ச்சி என வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1949ம் ஆண்டு மாவோ சே துங் தலைமையில் தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அதிகாரத்தை இழந்துவிடக்கூடிய அச்சத்தால் அக்கட்சி காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எத்தனை விமர்சனங்கள் வந்த போதும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இருந்து ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை தடுக்க முடியவில்லை.
கொள்கை வேறு, கோலம் வேறு என்ற இரட்டை நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கட்சியின் முன்னணி பொறுப்பை வகித்த கய் சியா என்ற பெண்மணி எழுதிய கட்டுரைகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
Comments