முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைக் கூறியதால் கொலை மிரட்டல்? - ஸ்வப்னா சுரேஷ் புகார்

0 3085

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான சிலரின் பெயர்களை விசாரணையில் தெரிவித்ததால், தமக்கு சிறைக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். 

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து, சிபிஐ அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அப்போது விசாரணையின் போது யாருடைய பெயரையும் குறிப்பிடக் கூடாது என்று திருவனந்தபுரம் சிறையில் இருந்த போது தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்ட போது சிறையில் இருப்பவர்களால் ஸ்வப்னாவுக்கு எந்த வித மிரட்டலும் அச்சுறுத்தலும் இல்லை  என்று விளக்கம் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments