கொரோனா தடுப்பூசி விநியோகத்தை கண்காணிக்க செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு

0 1174

கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தை கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கோ-வின் செயலி தடுப்பூசி அளிப்பவர்கள், பெறுவர்கள் போன்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி செலுத்திய பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும் எனவும், க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும் என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments