பைசர் கொரோனா தடுப்பூசி சாதகமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தகவல்
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சாதகமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதாக, எப்டிஏ எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், 38 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில், பாதுகாப்பு பிரச்னைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி, பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் பைசர் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The FDA released documents showing that data on Pfizer’s COVID-19 vaccine was in line with its guidance on emergency-use authorization, raising hopes it could soon be available to Americans aged 16 and older https://t.co/kxCe2LsQJf $PFE pic.twitter.com/8AWKz43ZSI
— Reuters (@Reuters) December 9, 2020
Comments