6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ராணுவத் தளபதி நரவனே

0 1118
6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ராணுவத் தளபதி நரவனே

ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே 6 நாள்கள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடுகளுக்கு இன்று  புறப்படுகிறார்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபிய நாடுகளில் 14ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முதலில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவர் அங்கு அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார். 

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இந்திய ராணுவத் தளபதி ஒருவர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments