புதிய வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்... குடியரசு தலைவரை சந்திக்க உள்ள எதிர்கட்சி பிரதிநிதிகள்

0 1928

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் உள்ளிட்ட 5 பேர் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

சந்திப்பின் போது, 14 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை, முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்துவர் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments