இந்தியாவில் 5 ஜி மொபைல் தொழில்நுட்பத்தை குறித்த காலத்தில் கொண்டு வரவேண்டும் - பிரதமர் மோடி

0 2076

இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை குறித்த காலத்தில் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் தொலைத் தொடர்புத் துறையினருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் மொபைல்களின் எதிர்கால வடிவமைப்பு, வளர்ச்சி உற்பத்தி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தொலைத் தொடர்புத்துறையில் மிகச்சிறந்த மூளைகள் பணிபுரிவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

எதிர்கால இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியை பெரிதாக எதிர்பார்ப்பதாக கூறிய பிரதமர் 5 ஜி மொபைல் தொழில்நுட்பம் இந்தியாவை சர்வதேச அளவிலான தொழில் மையமாக மாற்றக்கூடியது என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments