தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு - சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் இது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் பெரிதும் பயன் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments