இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி
3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது.அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் குவித்தனர். தமிழக வீரர்கள் வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 85 ரன்கள் விளாசினார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில், ஏற்கெனவே 2ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருது இந்திய அணி வீரர் ஹார்திக் பாண்டியாவுக்கு வழங்கபட்டது.
Comments