ஹெச்1 பி விசா மோசடி -ஆந்திர தம்பதிக்கு எதிராக அமெரிக்கா, இண்டர்போல் லுக்அவுட் நோட்டீஸ்
ஹெச்1 பி விசா மோசடியில் தலைமறைவாக உள்ள ஆந்திர தம்பதிக்கு எதிராக அமெரிக்காவும், இண்டர்போலும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளன.
மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சுனில்-பிரணீதா தம்பதி, பலரிடம் எஃப்1 விசா மற்றும் ஹெச்1 பி விசா பெற்றுத் தருவதாக தலா 25 ஆயிரம் டாலர்கள் வீதம் சுமார் 10 கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிடவே, ஏமாந்த மாணவர்கள் அளித்த புகாரின்பேரில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவில் இருந்து வெளியேறி, ஐரோப்பாவில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், சுனில்-பிரணீதா தம்பதிக்கு எதிராக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையும், இண்டர்போல் அமைப்பும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
Comments