அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரிய மனு-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கும் இடம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் 2286 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக, பொதுநல வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சமூக-பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களே பயின்று வருவதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது பாரபட்சம் என்றும் மனுதாரர் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Comments