3ஆவது டி20 கிரிக்கெட்...இந்தியா பந்துவீச்சு

0 3690
3ஆவது டி20 கிரிக்கெட் இந்தியா பந்துவீச்சு

சிட்னியில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீசி வருகிறது. 

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது.

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து 3ஆவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி, சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்றால், 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வொய்ட் வாஸ் செய்து இந்திய அணி சாதனை படைக்க முடியும்.

பிற்பகலில் தொடங்கிய போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யவே, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments