அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 3002
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

இரு வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரப்பிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments