போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

0 1303
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக கூறி ஜாமீன் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடிகை சஞ்சனா மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, நடிகை சஞ்சனாவிற்கு வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும், சிகிச்சைக்கான மருத்துவ அறிக்கையை வருகிற 10-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, மருத்துவ அறிக்கையை பரிசீலித்து அன்றைய தினம் ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

இதனையடுத்து, நடிகை சஞ்சனா மீண்டும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments