சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை தொடரலாம்

0 11257

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை உரிய வழிமுறைகளை கடைபிடித்து  செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தில் நிலம்  கையகப்படுத்துவதற்கு உரிய சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை எனக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணை நடைபெற்று, கடந்த அக்டோபர் 1ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.

உரிய நடைமுறைகளை கடைபிடிக்காமல்  திட்டத்திற்காக நிலத்தினை கையகப்படுத்தியது, பெயர் மாற்றம் செய்த முறைகள் தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் பெயருக்கு மாற்றி கொடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழல் முன் அனுமதி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் உரிய முறையில் பின்பற்றியே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தொடர வேண்டும் என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments