விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் மேலும் ஓராண்டுக்கு தள்ளிப்போகலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்
விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது மேலும் ஓராண்டுக்கு தள்ளிப்போகலாம் என இஸ்ரோ கூறியுள்ளது.
ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக, ஆளில்லா விண்கலத்தை சோதனை ஓட்டமாக இம்மாதமும், வரும் ஜூலையிலும் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கொரோனா பேரிடரால் பணிகளில் ஏற்பட்ட பல்வேறு தாமதம் காரணமாக இந்த சோதனை ஓட்டங்களும், ககன்யான் திட்டமும் தள்ளிப்போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திராயன் 3 திட்டத்திற்கு இன்னும் தேதி குறிக்கப்படவில்லை என்றும், வெள்ளி கோளை ஆராய்ச்சி செய்யும் சுக்ராயன் திட்டத்திற்கான ஆய்வுக் கருவிகள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் சிவன் கூறியுள்ளார்.
#Gaganyaan's manned mission likely to be delayed: Isro chief K. Sivanhttps://t.co/66MxU8X6y6 pic.twitter.com/LuIlLwxNMJ
— Mint (@livemint) December 7, 2020
Comments