செல்போன் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை 30 நிமிடங்களில் முடிவை தெரிந்து கொள்ள முடியும் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

0 3042
செல்போன் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை 30 நிமிடங்களில் முடிவை தெரிந்து கொள்ள முடியும் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

கொரோனா நோய்த்தொற்று பரிசோதனையை செல்போன் மூலம் 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தற்போது நோய் எதிர்பொருள் துரித பரிசோதனைக் கருவியும், அந்நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கிரிஸ்பர்  தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்கருவியில் கொரோனா வைரசின் ஆர்என்ஏ ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  குறிப்பிட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியானது, செல்போனில் இணைக்கப்படும் கருவியின் மூலமாகப் பரிசோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த மாதிரியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கேற்ப அதன் ஒளிரும் தன்மையை செல்லிடப்பேசி கேமரா மூலமாகக் கண்டறியலாம் என்றும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால், மாதிரி அதிகமாக ஒளிரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments