தாய்லாந்தில் தொங்கு பாலத்தில் நின்று குழு புகைப்படம் எடுக்க முயன்ற அழகிகள்... பாலம் அறுந்து விழுந்து 3 பேர் காயம்
தாய்லாந்தில் அழகிப் போட்டியின் போது தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் போட்டியில் பங்கேற்றவர்கள் நீருக்குள் விழுந்தனர்.
மிஸ் தாய்லாந்து போட்டிகள் சியாங் மாய் என்ற இடத்தில் நடந்து வருகின்றன. இதற்காக பல்வேறு கட்டங்களுக்கு மத்தியில் 30 அழகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் குழு புகைப்படம் எடுப்பதற்காக அங்கிருந்த தொங்கு பாலத்தில் நின்றனர்.
அப்போது அவர்களின் எடைதாளாமல் தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதனால் பாலத்தில் இருந்த அழகிகள் நீருக்குள் விழுந்து மூழ்கினர். இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
Comments