ஜாம்பியாவில் பழந்தின்னி வவ்வால்களின் வலசை அச்சுறுத்தலாகி உள்ளது
உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளான பழந்தின்னி வவ்வால்கள் வலசை செல்வது அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது.
ஜாம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள கஸான்கா தேசியப் பூங்காவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பழந்தின்னி வவ்வால்கள் உள்ளன.
வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையே வலசை சென்று வரும் இந்த வவ்வால்கள் தற்போது பெரும் அச்சுறுத்தலில் உள்ளன.
இதன் வாழிடப் பகுதிகள் குறிப்பாக 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பை வணிகப் பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ளதால் பழந்தின்னி வவ்வால்கள் இருக்க இடமின்றி தவித்து வருவதாக பறவையியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments