சென்னையில் இருசக்கரவாகனத்தில் வந்த தாய் - மகள் மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நொளம்பூர் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கெரோலின் பிரமிளா மற்றும் அவரது மகள் இவரின் ஆகியோர் தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
6.12.2020 அன்று இரவு சுமார் 7 மணியளவில் நொளம்பூர் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருமதி.கெரோலின் பிரமிளா (வயது 50) மற்றும் அவரது மகள் இவரின் (வயது 20) ஆகியோர் தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 7, 2020
Comments