இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானுடன் சேர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் சீனா
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தானின் சிந்து பகுதியில் உள்ள தட்டா மாவட்டத்தின் போலாரி விமானப்படைத் தளத்திற்கு தங்கள் வீரர்கள் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அங்கு இரு நாட்டு விமானப்படை வீரர்களும் ஷாகின் 9 என்ற பெயரில் போர் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பரின் பிற்பகுதியில் முடிவடையும் இந்தப் பயிற்சி மூலம் சீனா, பாகிஸ்தான் இடையே உறவுகள் மேலும் வலுவடையும் என சீன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments