இந்திய மொபைல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.
தொலைதொடர்புத்துறையும், மொபைல் சேவை சங்கத்தினரும் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, டெல்லியில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
பிரதமரின் தற்சார்பு இந்தியா, டிஜிட்டல் உள்ளடக்கம், நீடித்த மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் புதுமை’ ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது.
மாநாட்டில் 30 நாடுகளை சேர்ந்த150 நிறுவனங்களும், 210 பேச்சாளர்களும், 3000 பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
Comments