டெல்லி-வாரணாசி இடையேயான புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்

0 1652

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி-வாரணாசி இடையே, புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பகுதியில், பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும் நிலையில், சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

800 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த திட்டத்தை, தேசிய அதிவிரைவு ரயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. 

நகரம் மற்றும் கிராமப்புறங்கள் என, பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments