பெற்றோர்கள்,கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் பிற கட்சிகளில் இருந்து விலகிய, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் பாரட்டும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், தேவையற்றவர்கள் அரசை விமர்சித்து வருவதாகவும், அவர்கள் எந்த வழக்கில் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை எனவும், செங்கோட்டையன் கூறினார்.
Comments