"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
காவல்துறை தடியடியில் பாஜக தொண்டர் உயிரிழந்ததாகக் கூறி மேற்கு வங்கத்தில் இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு
மேற்கு வங்கத்தில் காவல்துறை தடியடியில் பாஜக தொண்டர் உயிரிழந்ததாகக் கூறி அங்கு இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கூறி சிலிகுரியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும், கூட்டத்தைக் கலைத்தனர்.
இதில் தொண்டர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறியுள்ள அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், இதற்காக இன்று 12 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் தொண்டரின் மரணத்திற்கு காரணம் குறித்து ஆராயப்படும் என மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments