ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 2503
ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

டிராஃபிக் ராமசாமி தரப்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, 2016-2019 ஆம் ஆண்டு வரை ஆயிரத்து 65 ஆட்டோக்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்டோக்களின் எண்ணிக்கை, காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் இயங்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை, விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்டோக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களோடு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மூன்று வாரங்களுக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments