நாய்குட்டிக்கு தாயான குரங்கு..! இனபேதம் இங்கில்லை

0 5238
கடலூர் அருகே நாய்க்குட்டி ஒன்றை பிள்ளை போல குரங்கு வளர்த்து வந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே நாய்க்குட்டி ஒன்றை பிள்ளை போல குரங்கு வளர்த்து வந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்துநிலையம் அருகே சில நாட்களாக குரங்கு ஒன்று நாய் குட்டியைத் தூக்கி கொண்டு திரிந்தது. தனக்கு கிடைக்கும் உணவை நாய்க்குட்டிக்கும் கொடுத்து வளர்த்தது. மேலும், அங்குமிங்கும் தாவும் போதும் நாய்க்குட்டியுடனயே தாவி வந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் பதை பதைத்தனர். சிலர் குரங்கிடமிருந்து நாய்க்குட்டியை மீட்கவும் முயற்சித்து வந்தனர். ஆனால், சுதாரிப்புடன் இருந்த குரங்கு நாய்க்குட்டியை விட்டு விடவில்லை. எந்த நேரத்திலும் நாய்க்குட்டியை தன் மார்பில் அணைத்தவாறே குரங்கு சுற்றி வந்தது.

இந்த நிலையில், நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குரங்கிடமிருந்து நாய்க்குட்டியை மீட்க முடிவெடுத்தனர். குரங்கிடம் பழத்தை காட்டி ஆசை காட்டினர்.

ஆனால், குரங்கு விழிப்புடன் இருந்ததால், நாய்க்குட்டியை இறக்கி விட மறுத்தது. ஆனாலும், தங்கள் முயற்சியை கை விடாத ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு குரங்கிடமிருந்து குட்டியை மீட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments