ஆய்வை முடித்துத் திரும்பிய மத்திய குழுவினர் வாகனத்தின் முன் முறிந்து விழுந்த மரம்

0 1757
கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியுடன் மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியுடன் மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மத்திய உள்துறை செயலர் அஷூதோஷ் அக்னிஹோத்ரி, விவசாய அமைச்சக இயக்குநர் மனோகரன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்சய்சிங், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டினா, மாநில அரசின் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

பூண்டியங்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வை முடித்துக் கொண்டு அதிகாரிகள் திரும்பும்போது, சோனான்சாவடி அருகே சாலையோர மரம் ஒன்று எதிர்பாராமல் அவர்களது வாகனத்தின் முன்பு விழுந்தது. உடனடியாக அதனை போலீசார் அகற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments