ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்சேஸுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போராட்டம்
ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்சேஸின் (Pedro Sánchez) அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேட்டலோனியா மாநிலத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு வலதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் அரசியலமைப்பு தினமான நேற்று, தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி கூடிய அவர்கள், ஆளுங்கட்சியும், பிரிவினைவாத இயக்கங்களும் சேர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை ஆபத்தில் தள்ளியுள்ளதாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments