விப்ரோவின் புதிய தலைமைச் செயல் அலுவலராக தியரி டெலபோர்ட் பொறுப்பேற்ற, 5 மாதங்களில் விப்ரோ பங்கு விலை 70 சதவீதம் உயர்வு
விப்ரோ நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியாகத் தியரி டெலபோர்ட் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 70 விழுக்காடு உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டவரான தியரி டெலபோர்ட் இன்னும் பெங்களூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவில்லை. பாரீசில் இருந்தபடியே காணொலி முறையில் அலுவலகத்தை மேலாண்மை செய்யும் அவர், உயர்நிலைகளில் இருந்த அலுவலர்களின் எண்ணிக்கையை 25இல் இருந்து நான்காகக் குறைத்துள்ளார்.
Comments