தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிறதா ? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 1282
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிறதா ? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றதா என அறிக்கை அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் விதிகளை மீறி  கூட்ட அரங்கு கட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தக்காரர்கள், அதிகத் தொகையைக் குறிப்பிட்டுள்ளதாகவும், ஒரு கல்லூரிக்குக் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொண்டு இரு கல்லூரிகள் கட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதிய மருத்துவக் கல்லூரிகள், விதிகளின்படி கட்டப்படுகிறதா என அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments