காலாவதியான சட்டங்கள் மூலம், புதிய நூற்றாண்டை கட்டமைக்க முடியாது - பிரதமர் மோடி
கடந்த நூற்றாண்டின் சட்டங்களை வைத்துக் கொண்டு, வரும் நூற்றாண்டை நாம் கட்டமைக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, அக்பரின் கல்லறை அமைந்துள்ள சிக்கந்தரா ஆகிய மூன்று சுற்றுலாத் தளங்களை இணைக்கும் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
8 ஆயிரத்து 379 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புதுப்புது வசதிகளையும் அமைப்பு முறைகளையும் ஏற்படுத்த சீர்திருத்தங்கள் அவசியம் என்றார். சென்ற நூற்றாண்டில் பயன்மிக்கதாக இருந்த சட்டங்கள் அடுத்த நூற்றாண்டில் சுமையாக மாறி விடுகின்றன என்று பிரதமர் கூறினார்.
Comments