ஈரான் அணு விஞ்ஞானி கொலை சம்பவம் : செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் துப்பாக்கி பயன்பாடு என தகவல்

0 2717
ஈரான் அணு விஞ்ஞானி கொலை சம்பவம் : செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் துப்பாக்கி பயன்பாடு என தகவல்

ஈரான் அணு விஞ்ஞானியை கொலை செய்ய செயற்கைக்கோளால் கட்டுபடுத்தப்படும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

டெஹ்ரான் அருகே கடந்த மாதம் 27ம் தேதி விஞ்ஞானி மொஹ்சின் பாக்ரிஜாதே (Mohsen Fakhrizadeh) துப்பாக்கியால் சுடப்பட்டும், கார்குண்டு மூலமும் கொலை செய்யப்பட்டார்.

இதன்பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஈரான் ராணுவ துணை கமாண்டர் அலி பதாவியை (Ali Fadavi) சுட்டிகாட்டி மெஹர் (Mehr) நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், தொலைவிலிருந்து ஜூம் செய்யப்பட்டு, பிறகு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments