கீழ்த்தரமான அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ளா விட்டால், அக்கட்சியினர் பற்றி பட்டி தொட்டி எங்கும் பேச நேரிடும் -அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமர்சனம் செய்து வருவதற்கு, மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை - தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்த்தரமான அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ளா விட்டால், அக்கட்சியினர் பற்றி பட்டி தொட்டி எங்கும் பேச நேரிடும் என எச்சரித்தார்.
முன்னதாக, 6 வயதில் 1 மணி நேரம் 22 நிமிடங்களில் 12 கிலோமீட்டர் ஓடி ஆசிய அளவில் சாதனை படைத்த தூத்துக்குடி சிறுவன் சுதனுக்கு, அமைச்சர் நேரில் பாராட்டு தெரிவித்தார். சிறுவனின் பயிற்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையையும் அமைச்சர் D. ஜெயக்குமார் வழங்கினார்.
Comments