ஜெயலலிதா பற்றி உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை ஆ.ராசா கூறுகிறார் - மூத்த வழக்கறிஞர் ஜோதி

0 3777
ஜெயலலிதா பற்றி உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை ஆ.ராசா கூறுகிறார் - மூத்த வழக்கறிஞர் ஜோதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசமைப்புச் சட்டத்தை மீறிய கொள்ளைக்காரி என உச்சநீதிமன்றம் சாடியதாக ஆ.ராசா கூறுவது பொய் என்று மூத்த வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜோதி, ஜெயலலிதாவுக்காக 12 வழக்குகளில் வாதாடி 11 வழக்குகளில் வெற்றிபெற்றுத் தந்ததாகக் கூறினார்.

ஆனால், 12ஆவது வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பாதியிலேயே சசிகலா தம்மை விரட்டி விட்டதாகவும், டிடிவி தினகரன் தனது உயிருக்கு உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி மிரட்டியதாகவும் வழக்கறிஞர் ஜோதி குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா இறந்துவிட்டதற்கான சான்றிதழை சசிகலா தரப்பு ஏன் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பிய ஜோதி, அப்படி செய்திருந்தால், வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும் என்றார்.

ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார் என்றும் அவர் சட்ட விளக்கம் ஒன்றை அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments