’சீனா வைரசால் எனது வழக்கறிஞர் ரூடி கிலியானி பாதிக்கப்பட்டுள்ளார்’ - அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வழக்கறிஞர் ரூடி கிலியானி சீனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் முன்னாள் மேயரான ரூடி கிலியானி அதிபர் டிரம்பின் தனி வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்குச் சோதனை செய்ததில் கொரோனா தொற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதை டிரம்ப் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே சிறந்த மேயரான கிலியானி, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் முறைகேடான தேர்தலில் சளைக்காமல் பணியாற்றிய நிலையில் சீனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
President Trump said that his personal attorney Rudy Giuliani has tested positive for the coronavirus, after the former New York City mayor traveled around the country to persuade Republican state lawmakers to help reverse the president’s election defeat https://t.co/PrHlqPFdjs pic.twitter.com/WyMW37NK6N
— Reuters (@Reuters) December 7, 2020
Comments