இந்தியாவுடனான உறவுகள் மீண்டும் சீரடைந்தபோதிலும், நேபாள வெளியுறவுத்துறை அறிக்கையில் மீண்டும் காலாபாணி சர்ச்சை
இந்தியாவுடனான உறவுகள் மீண்டும் சீரடைந்தபோதிலும், காலாபாணி எல்லை சர்ச்சையை நேபாளம் கைவிட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
உத்தரகாண்டின் பித்தோராகர்க் மாவட்டத்தில் உள்ள காலாபாணி பகுதியை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. அந்த பகுதியை நேபாள பகுதி போல காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு உறவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் இந்திய தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டன.
நேபாள தரப்பில் இருந்தும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Pradeep Gyawali இம்மாதத்தில் இந்தியா வர உள்ளார். இருப்பினும் கூட, வெளிநாட்டு உறவுகள் குறித்த ஆண்டறிக்கையில் காலாபாணி, Limpiyadhura, Lipulekh ஆகியவற்றை இந்தியா தன்னுடைய பகுதி போல காட்டும் வரைபடங்களை சரிசெய்யவில்லை என நேபாளம் குறிப்பிட்டுள்ளது.
Comments