வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மோதிய சரக்கு வாகனம் - காவலர் உயிரிழப்பு

0 4092
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மோதிய சரக்கு வாகனம் - காவலர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது அதிவேகமாக வந்த சரக்கு வேன் மோதிய விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

அரப்பாக்கம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தருமபுரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வேன் போலீசார் மீது மோதியது.

இதில் வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்த காவலர் ஐனமூர்த்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் படுகாயம் அடைந்தார்.

உயிரிழந்த ஐனமூர்த்திக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மோகன் ராஜை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments