ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபர் பதவி விலகக் கோரி ஏராளமானோர் தொடர் போராட்டம்
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மோசடி செய்து வெற்றி பெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, மீண்டும் அங்குள்ள எதிர்ப்பாளர்கள், அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் மின்சிக் நகரில் நடந்த பேரணியில், அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பதவி விலக வேண்டும் என கொடிகளை ஏந்தியவாறு, கைத்தட்டி முழக்கமிட்டுச் சென்றனர்
Comments