தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைப்பு

0 3122

மிழகத்தில் சாதிவாரிப் புள்ளி விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நலத்திட்டப் பயன்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களைப் பெறவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, புள்ளி விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments