சத்தீஸ்கரில் கரடி தாக்கி 4 கிராம மக்கள் பரிதாபமாக உயிரிழப்பு

0 1545

த்தீஸ்கர் மாநிலத்தில் கரடி தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோரியா மாவட்டம் ஆங்க்வாஹி கிராமத்துக்குள்  அருகிலிருந்த வனபகுதியில் இருந்து நேற்று புகுந்த கரடி ஒன்று, எதிர்பட்ட மக்களை தாக்கியுள்ளது. கரடியின் தாக்குதலில் மொத்தம் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் 4 பேர்  உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கரடி தப்பியோடிவிட்ட நிலையில், அதை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments