டெல்லியில் துப்பாக்கிச் சண்டை நடத்தி 5 தீவிரவாதிகளை கைது செய்த போலீசார்
டெல்லியில் துப்பாக்கிச் சண்டை நடத்தி 5 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறையை சேர்ந்த சிறப்பு பிரிவினர், ஷாகர்பூர் பகுதியில் 5 பேரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலையில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் சிதறிக் கிடப்பது, கார் சேதமடைந்திருப்பது உள்ளிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பால் இயக்கப்படுபவர்கள் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் ஜம்மு-காஷ்மீரையும், 2 பேர் பஞ்சாப்பையும் சேர்ந்தவர்கள் என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments