அமேசான் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் குற்றச்சாட்டு... 1.45 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதிக்க வலியுறுத்தல்
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளை மீறியதற்காக அமேசான் நிறுவனத்துக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமலாக்கத்துறைச் சிறப்பு இயக்குநர் சுசில் குமாருக்கு வணிகர் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், அமேசான் நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அமேசானின் முதலீட்டால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையின் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
Comments