ஆ.ராசவுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் : தமது சவாலை ஏற்க திமுக தயாரா? - அமைச்சர் இராஜேந்திர பாலாஜி
ஊழல் குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ள தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமது சவாலை ஏற்க திமுக தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். விருதுநகரில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த சவாலை ஆ. ராசாவுக்கு விடுத்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலில் ரஜினி, அரசியல் கட்சி தொடங்கட்டும் - பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என்றார். தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, அமைச்சர் ராrajiniஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Comments