புயல் சேத விபரங்களைப் பார்வையிட மத்திய ஆய்வுக் குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு
புயல் சேத விபரங்களைப் பார்வையிட வந்துள்ள மத்தியக் குழுவினரில் ஒரு குழுவினர் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், 2வது குழுவினர் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்று ஆய்வு நடத்துகின்றனர்
தமிழகத்தில் அண்மையில் உருவான நிவர் புயலால் கடலூர், புதுவை, சென்னை , வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் தென் சென்னையிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆய்வு செய்தனர். இதில் முதல் குழுவினர் இன்று காலை புதுச்சேரியில் ஆய்வை முடித்துவிட்டு, பிற்பகலில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை ஆய்வு செய்கின்றனர்.
பின்னர், இரவில் சென்னை திரும்புகின்றனர். அதேபோல் இரண்டாவது குழுவினர் இன்று காலை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் சென்னை திரும்புகின்றனர்.
அதன் பின் நாளை காலை இரு குழுவினரும், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அன்றைய தினம் மாலையே டெல்லி திரும்பும் மத்திய குழுவினர் தமிழக சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க உள்ளனர். இதனடிப்படையில் தமிழகத்திற்கான நிதி உதவி குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என தெரிகிறது.
Comments