விவசாயிகள் பிரச்சினையில் யாரும் இடையில் புகுந்து குட்டையைக் குழப்ப வேண்டாம் -சன்னி தியோல்
விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் இடையில் புகுந்து குட்டையைக் குழப்ப வேண்டாம் என்று பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோல் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது கட்சியின் நிலைப்பாட்டை மதிக்கிற அதே வேளையில் விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை தாம் ஆதரிப்பதாகவும் கூறிய சன்னி தியோல், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தப் போராட்டம் குறித்த கருத்துகள் வருவதை சுட்டிக் காட்டி மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான பிரச்சினையில் யாரும் தலையிட வேண்டாம் என்று கோரியுள்ளார்.
I stand with BJP and farmers; govt always thinks of farmers' betterment: Sunny Deol
— ANI Digital (@ani_digital) December 6, 2020
Read @ANI Story | https://t.co/CcsSrbKgwr pic.twitter.com/quL9Sulz0E
Comments