கோத்தகிரியில் பகல் நேரங்களில் ஜாலியாக உலா வரும் கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பகல் நேரங்களில் தேயிலை தோட்டத்திற்குள் சுற்றித் திரியும் கரடியால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
கேத்தி, கொலக்கம்பை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தேயிலைக்கு ஊடுபயிராக பேரிக்காய், ஆரஞ்சு உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் .இதனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து கரடிகள் பழங்களை தின்பதற்காக தேயிலை தோட்டத்தில் உலா வருகின்றன.
இதனை அடுத்து கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments