எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்கிறது நேபாள அரசு
ஓராண்டாக நடைபெற்று வந்த எவரெஸ்டின் உயரத்தை அளவிடும், பணியின் முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. 8,848 மீட்டர் உயரத்துடன், உலகின் உயரமான சிகரமாக எவரெஸ்ட் கருதப்படுகிறது.
ஆனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதுவாக இருக்காது என மறுக்கப்படுகிறது. இதையடுத்து, சீனாவுடன் சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்தின், உயரத்தை அளவிடும் பணியை நேபாள அரசு கடந்த ஆண்டு மேற்கொண்டது. இதற்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.
Comments