இன்று பாஜகவில் முறைப்படி இணைகிறார் நடிகை விஜயசாந்தி
நடிகை விஜயசாந்தி இன்று மீண்டும் பாஜகவில் இணைய உள்ளார். 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த விஜயசாந்தி கடந்த சில மாதங்களாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்தார்.
தமக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லாததால் காங்கிரசில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். நேற்று தெலுங்கானா பாஜக தலைவர் சஞ்சய்குமார் உடன், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்திற்கு வந்த விஜயசாந்தி ஒருமணி நேரம் பேச்சு நடத்தினார். இதையடுத்து அவர் பாஜகவில் இன்று இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.
Delhi: Telugu actor-turned-politician Vijayashanti meets MoS and BJP leader G Kishan Reddy. Other leaders of the party also present. pic.twitter.com/0Ls6wCc4BF
— ANI (@ANI) December 6, 2020
Comments